மக்களுடன் முதல்வர் திட்டம் - மனு அளிக்க 16 நாட்கள் சிறப்பு முகாம்
காஞ்சிபுரத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் மனு அளிக்க 16 நாட்கள் சிறப்பு முகாம் நடக்கிறது.
மக்களுடன் முதல்வர் சிறப்புத் திட்டத்தின்படி, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, நகரத்தினைச் சுற்றியுள்ள பஞ்சாயத்துகளில் முதற்கட்டமாக பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்று தீர்வு காணும் முகாம்கள் எதிர்வரும் 03.01.2024 முதல் 30.01.2024 வரை நடத்தப்படவுள்ளது. அதன்படி, 03.01.2024 அன்று காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 1, 2, 3, 4, 9, 10 ஆகிய வார்டுகளுக்கு குஜராத்தி சத்திரத்திலும் (ம) மாங்காடு நகராட்சிக்குட்பட்ட 1 முதல் 13 வரையிலான வார்டுகளுக்கு கல்யாணி திருமண மண்டபத்திலும் நடைபெறுகிறது.
04.01.2024 அன்று காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 5, 6, 7, 8, 16, 17, 18 ஆகிய வார்டுகளுக்கு அறிஞர் அண்ணா அரங்கத்திலும் (ம) ஏனாத்தூர் கிராம பஞ்சாயத்திற்கு சமுதாயக்கூடம், சமத்துவபுரத்திலும் நடைபெறுகிறது. 05.01.2024 அன்று காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 19, 20, 21, 22, 23, 24, 34 ஆகிய வார்டுகளுக்கு வணிகர் வீதி, மகாலஷ்மி திருமண மண்டபத்திலும், களியனூர் கிராம பஞ்சாயத்திற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் நடைபெறுகிறது. 06.01.2024 அன்று காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 25, 26, 27, 28, 29, 30 ஆகிய வார்டுகளுக்கு துளசி மகாலிலும், முத்தியால்பேட்டை கிராம பஞ்சாயத்திற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் நடைபெறுகிறது.
09.01.2024 அன்று காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 31, 32, 33, 35, 36, 45 ஆகிய வார்டுகளுக்கு ப்பி. எம். எஸ். சாலம்மாள் திருமண மண்டபத்திலும், வையாவூர் கிராம பஞ்சாயத்திற்கு வி.ப்பி.ஆர்.சி. கட்டிடத்திலும் நடைபெறுகிறது.10.01.2024 அன்று காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 46, 47, 48, 49, 50, 51 ஆகிய வார்டுகளுக்கு தனலஷ்மி திருமண மண்டபத்திலும், அய்யப்பன்தாங்கல் கிராம பஞ்சாயத்திற்கு சமுதாயக்கூடத்திலும் நடைபெறுகிறது. 11.01.2024 அன்று காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 11, 12, 13, 14, 15, 37 ஆகிய வார்டுகளுக்கு பிள்ளையார்பாளையம் செங்குந்தர் சத்திரத்திலும், கெருகம்பாக்கம் கிராம பஞ்சாயத்திற்கு செல்வன் மகாலிலும் நடைபெறுகிறது.