ஆய்க்குடியில் அமர் சேவா சங்கத்தில் முதலமைச்சர் பிறந்த தின விழா

ஆய்க்குடியில் அமர் சேவா சங்கத்தில் முதலமைச்சர் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.

Update: 2024-03-07 10:59 GMT
ஆய்க்குடியில் அமர் சேவா சங்கத்தில் முதலமைச்சர் பிறந்த தின விழா

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் வழக்கறிஞர் சாகுல் ஹமீது ஏற்பாட்டில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த தின விழாவை முன்னிட்டு நேற்று மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி முன்னாள் மாவட்ட துணை செயலாளர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.

இதில் தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் மதிய உணவுகள் வழங்கி வாழ்த்தி பேசினார். மேலும், திமுக மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் முருகையா உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News