அலங்காநல்லூரில் முதல்வர் பிறந்த நாளையொட்டி இளைஞரணி சார்பில் அன்னதானம்

அலங்காநல்லூர் அருகே சின்ன இலந்தைகுளம் கிராமத்தில் தமிழக முதல்வர் பிறந்த நாளையொட்டி திமுக இளைஞரணி சார்பில் அன்னதானம் நடந்தது.;

Update: 2024-03-05 14:58 GMT
அலங்காநல்லூரில் முதல்வர் பிறந்த நாளையொட்டி இளைஞரணி சார்பில் அன்னதானம்

அலங்காநல்லூர் அருகே சின்ன இலந்தைகுளம் கிராமத்தில் தமிழக முதல்வர் பிறந்த நாளையொட்டி திமுக இளைஞரணி சார்பில் அன்னதானம் நடந்தது.


  • whatsapp icon

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சின்னஇலந்தைகுளம் கிராமத்தில் திமுக அரசின் சாதனை விளக்க கூட்டம் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி இளைஞரணி சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை இளைஞரணி நிர்வாகி முருகேசன் கார்த்திக் செய்திருந்தார்.

வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வைகை மருது கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து திமுக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் பொதுமக்களுக்கு கொண்டு வரப்பட்ட திட்டங்களான மகளிர் உரிமை தொகை, பேருந்தில் இலவச பயணம், மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு செயல் திட்டங்கள் குறித்து பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கினர். இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் இந்த அன்னதானத்தில் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News