விழுப்புரம் : முதல்வர் பிறந்தநாள் கொண்டாட்டம்
தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு திண்டிவனத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.;
Update: 2024-03-04 17:29 GMT
அன்னதானம்
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் திமுகவினர் பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கியும் நலத்திட்டங்கள் உதவி வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பாக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளரும் திண்டிவனம் நகராட்சி வார்டு கவுன்சிலருமான சந்திரன் ஏற்பாட்டில் 1500 பேருக்கு அறுசுவை உணவு அன்னதானத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்து, தானும் பொதுமக்கள் உடன் அமர்ந்து உணவருந்தினார். இதற்கு முன்னதாக 5 கிலோ கேக்கை வெட்டி முதலமைச்சர் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினார்கள்.