சின்னசேலத்தில் திமுக சார்பில் முதல்வர் பிறந்த நாள் விழா

கள்ளகுறிச்சி மாவட்டம்,சின்னசேலம் பகுதியில் திமுகவினர் சார்பில் முதல்வரின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-03-03 09:59 GMT

சின்னசேலத்தில் திமுக சார்பில் முதல்வர் பிறந்த நாள் விழா

சின்னசேலம் வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி பல்வேறு கிராமங்களில் கட்சிக் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. கடத்துார் கிராமத்தில் நடந்த விழாவிற்கு, வடக்கு ஒன்றிய செயலாளர் அன்புமணிமாறன் தலைமை தாங்கினார்.

தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவி வழங்கினார். விழாவில், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கோம்பையன், கிளைச் செயலாளர்கள் அன்பரசு, சக்திவேல், இளைஞரணி நிர்வாகி ஹரிகிருஷ்ணன், ஆசிரியர் மாயக்கண்ணன், நிர்வாகிகள் சின்னையன், ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News