பேராவூரணியில், டிச.19ல் மக்களுடன் முதல்வர் முகாம் 

பேராவூரணியில், டிச.19ஆம் தேதி மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற உள்ளது.

Update: 2023-12-17 11:17 GMT
பேராவூரணி பேரூராட்சி அலுவலகம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் நாளை (டிச.19 செவ்வாய்க்கிழமை) மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற உள்ளது.  இதுகுறித்து, பேராவூரணி தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் பா.பழனிவேல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,  பேராவூரணி பேரூராட்சி திருமண மண்டபத்தில், டிச.19 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற உள்ளது. 

இந்த முகாமில், மின்வாரியம், வருவாய் பேரிடர் மேலாண்மை துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, காவல் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள்,

ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைகள் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகள்  மற்றும் வாழ்வாதாரக் கடன் உதவிகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான இந்த சிறப்பு முகாம், தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படியும், மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படியும், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ஆலோசனையின்படி நடைபெற உள்ளது.  எனவே, இந்த முகாமில் பேராவூரணி பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையினை கணினியில் பதிவு செய்து கொண்டு தீர்வு பெறலாம். எனவே, அதற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் கொண்டு வர வேண்டும்" என தெரிவித்துள்ளார்.  மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறுவதை முன்னிட்டு, பேராவூரணி பேரூராட்சி பகுதி முழுவதும், வாகனங்களின் மூலம் ஒலிப்பெருக்கி அமைக்கப்பட்டு விளம்பரமும், வீடு தோறும் துண்டுப் பிரசுரமும் வழங்கப்பட்டுள்ளது.  மேலும், ஆங்காங்கே விளம்பர பதாகைகள் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News