முதல்வரின் தனி செயலாளர் தந்தை மறைவு - முதல்வர் நேரில் அஞ்சலி

தமிழ்நாடு முதலமைச்சரின் தனிச் செயலாளர் தினேஷ்குமாரின் தந்தை ரவியின் மறைவையொட்டி முதல்வர் ஸ்டாலின் வெண்ணந்தூருக்கு வருகை தந்து, அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

Update: 2024-05-14 08:15 GMT

 நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூரை சேர்ந்த R. தினேஷ் குமார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தனிச்செயலாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய தந்தை T.V. இரவி, நேற்று முன்தினம் (12.5.2024) உடல் நலக்குறைவால் காலமானார். இதைத் தொடர்ந்து நேற்று (13.5.2024) அவரது உடலுக்கு தமிழக அமைச்சர்கள் K.N. நேரு, எ.வ.வேலு, க. பொன்முடி, மா. சுப்பிரமணியன், மூர்த்தி, சு. முத்துசாமி, டாக்டர் மா. மதிவேந்தன், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் K.R N. இராஜேஷ்குமார் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து நேற்று(13.5.2024 - மாலை) அவரது உடல் இராசிபுரம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இதற்கிடையே இன்று (14.5.2024 ) தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமது தனிச்செயலாளர் தினேஷ்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க, நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூருக்கு இன்று முற்பகல் 11: 40க்கு வருகை தந்து, அங்கு, T.V. இரவியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார் . மேலும், தினேஷ்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். உடன் கனிமொழி எம்பி,மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News