முதல்வர் பிப்25ல் வருகை: முன்னேற்பாடு பணிகளை ஆட்சியர் ஆய்வு!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 25ஆம் தேதி தூத்துக்குடி வருகை தர உள்ள நிலையில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் லட்சுமிபதி ஆய்வு செய்தார்.
Update: 2024-02-19 09:59 GMT
தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 25ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் வின்பாஸ்ட் கார் தொழிற்சாலை நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்ட வருகைதர உள்ளார். இதனை முன்னிட்டு விழா நடைபெற உள்ள இடத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் முன்னிலையில் இன்று (18.02.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக்கேயன், தூத்துக்குடி நகர உதவி காவல் கண்காணிப்பாளர் (ம்) கேல்கர் சுப்ரமணிய பால்சந்திரா ஆகியோர் உடனிருந்தனர்.