பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் ஆய்வு செய்த தலைமை ஸ்தபதி

பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரத்தை தலைமை ஸ்தபதி ஆய்வு செய்தார்.

Update: 2023-10-26 10:49 GMT

கோபுரத்தை ஆய்வு செய்த ஸ்தபதி


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜ கோபுரம் இல்லாதது பக்தர்கள் மத்தியில் பெரும் குறையாக இருந்து வந்தது. அஸ்திவாரத்தோடு நின்று போன ராஜகோபுரம் கட்டும் பணியை மீண்டும் தொடங்குவதற்காக தேவ பிரசன்னம் பார்த்த போது, கும்பாபிஷேகம் நடத்தி விட்டு பணியை தொடங்க வேண்டும் என்று அருள்வாக்கு கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து ராஜகோபுரம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. இந்த நிலையில் இறுதி கட்ட ஆய்வாக இந்து சமய அற நிலையத் துறையின் தலைமை ஸ்தபதியும் மகாபலிபுரம் அரசு சிறப்பு கலைக் கல்லூரியின் முதல்வருமான தட்சணா மூர்த்தி தலைமையிலான வல்லுனர் குழுவினர் இன்று காலை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டப்படும் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.      

இந்த ஆய்வின்போது குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், மண்டல ஸ்தபதி செந்தில், மராமத்து பிரிவு பொறியாளர் ராஜ்குமார், மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News