குழந்தையை கடத்தி சென்ற குற்றவாளி கைது

திருப்பூர் ரயில் நிலையத்திலிருந்து குழந்தையை கடத்திச் சென்ற குற்றவாளி கைது.

Update: 2024-01-26 11:32 GMT

 குழந்தையை கடத்தி சென்ற இளைகன்

கடந்த 2023 ஆம் ஆண்டு ரயில் நிலையத்தில் இருந்து குழந்தையை கடத்திச் சென்ற வழக்கில் கார்த்திகேயன் என்பவர் கைது- தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் நாகராணி தம்பதியினர் இவர்களுக்கு திலீப் என்ற நான்கு வயது சிறுவன் உள்ளான் கார்த்திக் நாகராணி ஆகிய இருவரும் தனது குழந்தை திலீப்புடன் கோவையில் கூலி வேலைக்கு வந்துள்ளனர் இந்நிலையில் கார்த்திக் நாகராணி ஆகிய இருவருக்கும் சண்டை ஏற்படவே கார்த்திக் தனது மகன் திலீப்பை அழைத்துக் கொண்டு திருப்பூர் வந்துள்ளான், திருப்பூருக்கு வந்த கார்த்திக் தனது குழந்தையுடன் ரயில் நிலையத்தில் இருந்த பொழுது அங்கிருந்த ஒரு நபர் தனது குழந்தையை எடுத்துச் சென்றுள்ளார். இது தொடர்பாக கார்த்திக் தன்னுடைய மனைவி நாகராணி ஆகிய இருவரும் சேர்ந்து திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் ரயில் நிலையத்தில் காத்துக் கொண்டிருந்த பொழுது தனது குழந்தையை காணவில்லை என புகார் மனு கொடுத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் கடந்த 16 1 2023 ஆம் தேதி குழந்தை காணவில்லை என புகார் பதிவு செய்யப்பட்டு குழந்தையை தேடி வந்தனர். இந்த நிலையில் காணாமல் போன குழந்தையை எடுத்துச் சென்ற கும்பகோணத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார் இது தொடர்பாக கார்த்திகேயன் குழந்தையை அழைத்துச் சென்ற பொழுது பார்த்த நபர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கவே விரைந்து வந்த காவல் துறையினர் கார்த்திகேயனை அழைத்து விசாரணை மேற்கொண்ட பொழுது கார்த்திகேயன் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து குழந்தையைப் பற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டத்தில் கார்த்திகேயன் அழைத்துச் சென்ற குழந்தை கும்பகோணத்தில் உள்ள தன்னுடைய தம்பி முருகதாஸ் என்பவர் வீட்டில் வளர்ந்து வருவதாகவும் அவர் கூறவே காவல்துறையினர் கும்பகோணத்தில் இருந்த கார்த்திக் நாகராணி ஆகியோரின் குழந்தையான திலீப்பை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் கார்த்திகேயனின் தம்பி முருகதாஸ் என்பவருக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் இந்த ஆண் குழந்தையை நல்லபடியாக வளர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து ஒரு வருடத்திற்கு பிறகு குழந்தையை மீட்டு பெற்றோரிடம் குழந்தையை ஒப்படைத்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News