அங்கன்வாடி மையத்தில் உணவு சாப்பிட்ட குழந்தைகள் மயக்கம்
மயக்கம்;
Update: 2024-02-08 11:18 GMT
அங்கன்வாடி குழந்தகைகள் மயக்கம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருநாவலூர் ஒன்றியம் உ.செல்லூர் கிராமத்தில் அங்கன்வாடி மையத்தில் உணவு சாப்பிட்ட குழந்தைகள் மயக்கம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் ஆட்சி மன்ற குழு உறுப்பினர், மாவட்ட கழக அவைத் தலைவர் உயர்திரு A.J.மணிக்கண்ணன் உடனடியாக நேரில் சென்று பார்வையிட்டு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார். குழந்தைகளின் பெற்றோர்களிடம் பிரட் பிஸ்கட் பழம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. மேலும் மருத்துவரிடம் சிகிச்சை குறித்து கேட்டு அறிந்தார்.