தேனியில் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கிய குழந்தைகள்

தேனியில் ஜல்லிக்கட்டு காளைகளை மழலைக் குழந்தைகள் அடக்கி பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

Update: 2024-01-12 11:17 GMT

ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் குழந்தைகள்

தேனி நகரில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் தைத்திருநாளான தமிழரின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருநாளை முன்னிட்டு மழலைக் குழந்தைகள் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

தைத்திருநாள் பண்டிகையான பொங்கல் பண்டிகை, உழவர் தினம், காணும் பொங்கல் ஆகிய பண்டிகையை கொண்டாடும் விதமாக கூரை வீடு அமைத்து பொங்கல் வைப்பது வயலில் உழுவுவது போன்ற குழந்தைகள் பாரம்பரிய உடைகள் அணிந்து பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.

பின்னர் பொங்கல் திருநாள் பாடல்களை குழந்தைகள் பாடினர் அதனை தொடர்ந்து ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு நடனம் சொல்லிக் கொடுத்து குழந்தைகள் அனைவரும் பொங்கல் பாட்டிற்கு நடனமாடி குதுகளித்தது அனைவரையும் ரசிக்கும் படியாக அமைந்தது.

பொங்கல் திருநாளில் இறுதி பண்டியான ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் நிகழ்ச்சியை மாணவர்கள் கண்ணெதிரே கொண்டு வந்தனர். வாடி வாசலில் இருந்து ஜல்லிக்கட்டு காளை துள்ளி பாய்ந்து வருவது போல அதை மழலை குழந்தைகள் அடக்க முடயற்சி செய்வதும் தத்ரூபமாக செய்து காட்டினர்.

தமிழர் திருநாள் பண்டிகைகள் குறித்து குழந்தைகள் மத்தியில் வளர்க்கும் விதமாக குழந்தைகளிடையே பொங்கல் பண்டிகை கொண்டாடுவதும் தமிழரின் பாரம்பரியத்தை சொல்லிக் கொடுத்து ஊக்குவிக்கும் செயலை ஆசிரியர்கள் முன்னெடுப்பது வரவேற்கத்தக்கதாக உள்ளது.

Tags:    

Similar News