கலை இலக்கிய கோடை விழாவில் குழந்தைகள் பாரம்பரிய விளையாட்டுகள் !!

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஆகியவை சார்பில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய கோடை கொண்டாட்டத்தின் 4ம் நாள் நிகழ்வாக குழந்தைகளுக்கான பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.

Update: 2024-05-25 09:31 GMT

கோடை விழா

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஆகியவை சார்பில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய கோடை கொண்டாட்டத்தின் 4ம் நாள் நிகழ்வாக குழந்தைகளுக்கான பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.

கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பல்வேறு பள்ளிகளின் சார்பாக 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கிட்டிகுச்சி, பல்லாங்குழி,பம்பரம் சுழற்றுதல், தாயம் ,தட்டாங்கல் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடி அசத்தினர்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மேரி டயானா ஜெயந்திதலைமை வகித்தார். இலக்குமி ஆலை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகராஜ்,வட்டார வள மைய மேற்பார்வையாளர் நட்டாத்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறார் இலக்கிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிமொழிநங்கை அனைவரையும் வரவேற்றார். மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ்ராஜன் பால புரஷ்கார் விருதாளர் உதயசங்கர் ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினர்.

இதில் நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ் பாரதியார் அறக்கட்டளை தலைவர் முத்துமுருகன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கண்ணகி, சிறார் இலக்கிய அமைப்பின் செயலர் பிரபு உள்பட பல்வேறு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கல்வித்துறை அலுவலர்கள்,இலக்கிய அமைப்பின் நிர்வாகிகள்,பெற்றோர்கள்,பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News