சிப்ஸ் கடைக்கு அபராதம் - உணவு பாதுகாப்புத்துறையினர் நடவடிக்கை
பாலக்கோடு அருகே சுகாதார குறைவாக செயல்பட்ட சிப்ஸ் கடைக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.;
Update: 2024-05-08 05:29 GMT
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு
தர்மபுரி மாவட்டம்,பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு மற்றும் வட்டம் எம் ஜி ரோட்டில் இயங்கி வரும் சிப்ஸ் கடைக்கு நேற்று மாலை உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டனர் அப்போது நடைபெற்ற ஆய்வில் சுத்தம் செய்யப்படாத வாட்டர் கேன்,எண்ணெய் ஆகியவற்றை பறிமுதல் செய்து சிப்ஸ் கடைக்கு 2000 ரூபாய் அபராதம் விதித்தார். மேலும் சுகாதாரமான தண்ணீர் மற்றும் ஆயிலை பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார்.