எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா
நாகை மாவட்டம் எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் நேரில் ஆய்வு செய்தார்.
Update: 2024-04-24 10:14 GMT
நாகை மாவட்டம் எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் நேரில் ஆய்வ நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை காவல் நிலையம் சரக்கத்தில் உள்ள எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் இரவு முழுவதும் பால்காவடி, ரதக்காவடி எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.. பக்தர்கள் வருகையை முன்னிட்டு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில் திருக்கோவில் வளாகத்தில் காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு 2 துணை காவல் கண்காணிப்பாளர் 7 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 300 காவல் துறையினர் 150 ஊர்க்காவல் படையினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கூட்ட நெரிசலில் குற்றம் மற்றும் திருட்டு சம்பவம் நடப்பதை தவிர்க்க குற்றத் தடுப்பு காவல்துறையினர் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக போக்குவரத்து காவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்கள்.