திருக்கண்ணங்குடி தாமோதர நாராயண பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா
கீழ்வேளூர் அருகே புகழ்பெற்ற வைணவ கோவில்களில் ஒன்றான திருக்கண்ணங்குடி தாமோதர நாராயண பெருமாள் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே திருக்கண்ணங்குடியில் புகழ்பெற்ற வைணவ கோவில்களில் ஒன்றான தாமோதர நாராயண பெருமாள் கோவில் உள்ளது . இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த (ஏப்ரல்) 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பல்வேறு வாகனத்தில் தாமோதர நாராயண பெருமாள் வீதி உலா நடைபெற்றது .26-ந் தேதி தாமோதர நாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் திருப்பல்லக்கில் அமர்ந்து கருடசேவை நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நேற்று தாமோதர நாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் அமர்ந்து முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடந்தது.கோவில் குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கோவில் நிர்வாகிகள் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.