சித்திரை திருவிழா: ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் பூதவாகனம் வீதியுலா

சித்திரை திருவிழாவை முன்னிட்டு நாகை மாவட்டம் திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் பூதவாகனம் பஞ்சமூர்த்தி வீதியுலா திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-04-18 16:17 GMT

சுவாமி வீதியுலா

சித்திரை திருவிழாவை முன்னிட்டு நாகை மாவட்டம் திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் பூதவாகனம் பஞ்சமூர்த்தி வீதியுலா திரளான பக்தர்கள் சாமி தரிசனம் . சித்திரை திருவிழாவை முன்னிட்டு திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் பூதவாகனம்பஞ்சமூர்த்தி வீதியுலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ரத்தினகிரீஸ்வரர் கோவில் நாகை மாவட்டம் திருமருகலில் ரத்தினகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.இக்கோவில் தேவாரப்பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். காவிரி தென்கரை தலங்களில் 80-வது சிவத்தலமாக விளங்குகிறது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திரு விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பஞ்சமூர்த்தி வீதியுலா விழாவையொட்டி 4-ம் நாள் காலை சூரிய பிரபபையில் சுவாமி, பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் இரவு பூதவாகனம் பஞ்சமூர்த்தி வீதியுலா அபிஷேக, ஆராதனையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் அசோக்ராஜா, தக்கார் தனலட்சுமி, கணக்கர் சீனிவாசன்,

ஆலய திருப்பணி குழுவினர்,திருமருகல் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருமருகல் மேலத்தெரு கிராமவாசிகள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News