நடைபயிற்சிக்காக நடைபாதை அமைக்க இடம் தேர்வு
திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் 8 கிலோ மீட்டர் துாரம் நடைபயிற்சிக்காக நடைபாதை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் 8 கிலோ மீட்டர் துாரம் நடைபயிற்சிக்காக நடைபாதை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன்,நகர் நல அலுவலர் செபாஸ்டின், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் வரதராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆர்.எம்., காலனி கூடைப்பந்து மைதானத்தில் தொடங்கி ஆர்.எம்., காலனி ஜங்சன்,80 அடி ரோடு, நத்தம் ரோடு,எம்.வி.எம்., கல்லுாரி ரோடு,ரயில்வே டிராக், ஆர்.எம்.காலனி 9வது குறுக்கு தெரு, நேருஜி நகர் வழியாக மீண்டும் கூடைப்பந்து மைதானத்திற்கு வரும் இவ்வழித்தடத்தில் 8 கிலோ மீட்டர் துாரத்திற்கு நடைபயிற்சி ஹநடைபாதை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.
மாநகராட்சி சார்பில் நடைபாதை பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள்,சிமென்ட் இருக்கைகள்,நடைபாதை குறித்த விழிப்புணர்வு வாசக போர்டுகளை ரூ.5 லட்சம் மதிப்பில் அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்படுகிறது.