உயர் கல்வியில் சரியான பாடத்திட்டத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்- கலெக்டர்
உயர் கல்வியில் சரியான பாடத்திட்டத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என பிளஸ் டூ முடித்த மாணவர்களுக்கு ஆட்சிகள் சுப்புலெட்சுமி அறிவுரை வழங்கியுள்ளார்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வேலூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி குறித்து வழிகாட்டும் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடந்தது. கலெக்டர் சுப்புலெட்சும குத்து விளக்கேற்றி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். ஆட்சியர் பேசுகையில்,"அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வி மற்றும் தொழில்சார் கனவுகளுக்கு தேவையான வாய்ப்புகளை வழங்குவதற்காகவே தமிழ்நாடு அரசின் சார்பில் நான் முதல்வன் எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு தடையற்ற உயர்கல்வி வழங்கும் வகையில் இந்த நிகழ்ச்சி அரசின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த உலகில் கல்வி ஒன்றே அழியாத செல்வம். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் வாழ்க்கை தரம் உயரவேண்டும் எனில் அவர்கள் உயர் கல்வியில் சரியான பாடத்திட்டங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்," என அவர் பேசினார்.