ஆர் கே எஸ் பள்ளியில் கிறிஸ்மஸ் விழா

ஆர்.கே.எஸ்., மாஸ்டர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்

Update: 2023-12-25 07:54 GMT

ஆர் கே எஸ் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., மாஸ்டர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா நடந்தது. கல்வி நிறுவனங்களின் தலைவர் மகுடமுடி தலைமை தாங்கினார். இயக்குனர்கள் மனோபாலா, சிஞ்சு மனோபாலா முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் தனலட்சுமி வரவேற்றார். விழாவில் கல்வி நிறுவனங்களின் செயலாளர் கோவிந்தராஜ், துணை தலைவர் ரவிசங்கர், பள்ளியின் துணை தலைவர் நளினி, வளர்மதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிர்வாக அலுவலர் மோகனசுந்தர், துணை முதல்வர் ஜான்விக்டர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் பள்ளி குழந்தைகள் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும் பள்ளியில் அமைக்கப்பட்ட கிறிஸ்துமஸ் குடிலை மாணவர்கள் பார்வையிட்டனர்.
Tags:    

Similar News