கிறிஸ்துமஸ் : நலத்திட்ட உதவிகள் வழங்கல்
தென்காசி அருகே அன்னை ராஜம்மாள் அறக்கட்டளை சார்பில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.;
Update: 2023-12-26 07:40 GMT
நலத்திட்ட உதவிகள்
தென்காசி மாவட்டம் ராஜகோபாலபேரியில் அன்னை ராஜம்மாள் அறக்கட்டளை சார்பில் கிறிஸ்மஸ் விழா ஒன்றிய கவுன்சிலர் நான்சி மற்றும் டொமினிக் ஆகியோர் தலைமையில் நடந்தது. விழாவில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் சிவபத்மநாதன் நலத்திட்ட உதவிகள் கல்வி உதவித்தொகைகள் வழங்கி வாழ்த்தி பேசினார். ஒன்றிய செயலாளர் சீனித்துரை, கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி, மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.