நிவாரணப்பணி மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் சாலை மறியல்
பூந்தமல்லியில் நிவாரண பணி மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் சாலை மறியல்;
By : King 24x7 Website
Update: 2023-12-07 06:07 GMT
பூந்தமல்லியில் நிவாரண பணி மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் சாலை மறியல்
சென்னை அடுத்த பூவிருந்தவல்லியில் வெள்ள நிவாரணப் பணிகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளவில்லை என கோரி 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். பூந்தமல்லி 1வது வார்டு மேல்மா நகர் பகுதி சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மக்கள் தற்போது சாலையை மறித்து போராட்டம் ஈடுபட்டு வருகின்றனர். சாலை மறியல் போராட்டத்தினால் வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. மாவட்ட கலெக்டர் வரும் வரை போராட்டம் நிறுத்தப் போவதில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்