மீன்கழிவு ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்

மார்த்தாண்டம் அருகே கேரளாவில் இருந்து மீன் கழிவு ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியை பொதுமக்கள் சிரைப்பிடித்தனர்.

Update: 2024-04-25 15:55 GMT

மீன் கழிவு ஏற்றி வந்த லாரியை சிறைப்பிடித்து மக்கள்

கேரளாவில் இருந்து மருத்துவ மற்றும் இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகளை குமரி எல்லை சோதனைச் சாவடிகள் வழியாக வாகனங்கள் மூலம் நள்ளிரவில் குமரி மாவட்டம் கொண்டு வந்து நீர் நிலைகள் மற்றும் சாலைகளில் கொட்டிவிட்டு செல்வது வாடிக் கையாக உள்ளது.இதனால் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று கேரளா தேசிய நெடுஞ்சாலை வழியாக டெம்போவில் மீன் கழிவு கள் வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மார்த்தாண்டத்தை அடுத்த பம்மம் பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். மேலும் நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சதீஷ், விளவங்கோடு தொகுதி செயலாளர் மகேஷ்வரன் உள்ளிட்ட கட்சியினரும் வந்தனர்.

அப்போது துர்நாற்றம் வீசியபடி கண்டைனர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அதை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது. அதில் மீன் கழிவுகள் இருந்தது தெரிய வந்தது. இதனை தடுத்து நிறுத்திய பொதுமக்கள் டெம்போவை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் குழித்துறை நகராட்சி அதிகாரிகளுக்கும் மார்த்தாண்டம் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர் சம்பவ இடம் வந்த மார்த்தாண்ட போலீசார் அந்த கண்டெய்னர் லாரியை அங்கிருந்து எடுத்துச் சென்றனர். பின்னர் அபராதம் மிதித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News