குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்

சாத்தான்குளம் பகுதியில் சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் காலி குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2024-05-02 13:01 GMT

சாத்தான்குளம் பகுதியில் சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் காலி குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் 1வது வார்டை சேர்ந்த கிருஷ்ணன் கோவில் தெரு, மேல சாத்தான்குளம், சண்முகம் நகரம், இட்டமொழி ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்பு வீடுகளில் சுமார் ஒரு மாத காலமாக குடிநீர் சரியாக கிடைக்கவில்லை இதனால் இப்பகுதி மக்கள் குடிதண்ணீர் இன்றி மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர் மேலும் விலை கொடுத்து வாகனங்களில் வரும் குடிநீரை வாங்கி செலவழித்துக் கொண்டிருக்கிறனர். பேரூராட்சி நிர்வாகம் சார்பில் இது குறித்து எவ்விதமான நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் செய்து வருவதாகவும் இப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் .கடந்த ஒரு மாதம் முன்பு குடிநீர் சப்ளை சரியில்லை சீராக வழங்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாக அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை அவர்கள் கவனிக்காமல் அலட்சியமாக செயல்படுவதால் குடிதண்ணீர் இன்றி அவதிபடும் பொதுமக்கள் இன்று (1ம் தேதி) காலை பெண்களோடு காலி குடங்களுடன் சென்று சாத்தான்குளம் பேரூராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்த சாத்தான்குளம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர் கந்தவல்லி அப்பகுதி 1வது வார்டு கவுன்சிலர் சுந்தர் ஆகியோர் வந்து போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதிகாரிகள் இதுகுறித்து பேரூராட்சி நிர்வாக அதிகாரியை சந்தித்து இன்னும் பத்து நாளில் இப்பகுதியில் சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்களும் பெண்களும் கலைந்து சென்றனர். மேலும் இது குறித்து மாவட்ட பேரூராட்சி நிர்வாகம் அலட்சியமாக செயல்படும் சாத்தான்குளம் பேரூராட்சி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இவர்கள் கோரிக்கையை வைத்துள்ளனர் இது குறித்து மாவட்ட பேரூராட்சி நிர்வாக அதிகாரிகளுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் இப்பகுதி பொதுமக்கள் மனுக்கள் அனுப்பியுள்ளனர்.

Tags:    

Similar News