சிஐடியு சாா்பில் நூதன முறையில் கோரிக்கை
திண்டுக்கல்லில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க வேண்டும் என சிஐடியு சாா்பில் நூதன முறையில் கோரிக்கை விடுக்கப்பட்டது.;
Update: 2024-05-08 07:43 GMT
பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க கோரிக்கை
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மதுரை லிட்., திண்டுக்கல் மண்டலத்தில் 15 பணிமனைகள் உள்ளன. இதில், திண்டுக்கல்லில் மட்டும் 3 கிளைகள் அமைந்துள்ளன. பழனி சாலையிலுள்ள பணிமனை 3-இல், ஓட்டுநா்கள், நடத்துநா்களின் தேவைக்காக குடிநீா் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அந்தத் தொட்டியிலுள்ள தண்ணீா் சுத்தமில்லாமலும், சுகாதாரமில்லாமலும் இருப்பதாக புகாா் எழுந்தது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க வேண்டும் என தொழிலாளா்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது. ஆனாலும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பணிமனை 3 முன் அமைந்துள்ள சிஐடியூ தகவல் பலகையில், கலங்கலான குடிநீரை 2 புட்டிகளில் பிடித்து கயறு கட்டி தொங்கவிட்டு போராட்டம் நடத்தினர்.