சிட்டி யூனியன் வங்கி 758வது கிளை திறப்பு

ஆர்ப்பாக்கத்தில் சிட்டி யூனியன் வங்கி 758வது கிளை திறப்பு விழா நடந்தது.;

Update: 2023-12-19 06:15 GMT

ஆர்ப்பாக்கத்தில் சிட்டி யூனியன் வங்கி 758வது கிளை திறப்பு விழா நடந்தது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் செயல்பட்டு வந்த தனியார் வங்கிகளில் இந்த வங்கி மிகவும் புகழ் பெற்றதும் மக்களின் தேவைகளை உணர்ந்து வியாபார கடன் , தனிநபர் கடன், விவசாயிகளுக்கு பயிர் கடன், சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு தொழில் அபிவிருத்தி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் கடன் உதவி வழங்கியது. அதேபோல் பொதுமக்களின் நம்பிக்கையை பெற்ற இந்த வங்கிக்கு பல கோடி ரூபாய் டெபாசிட் ஆகும் பொதுமக்கள் அளித்து வங்கிக்கு உறுதுணை புரிந்து தற்போது வரை எந்த ஒரு புகாருக்கும் ஆளாகாமல் சிறந்த வங்கியாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் பெரு நகரங்களில் மட்டுமே தனது கிளைகளைக் கொண்ட நிலையில் கிராமப்புற பொதுமக்களிடம் வங்கி சேவையை அளிக்கும் வகையில் கிராமங்களினை நோக்கி அடியெடுத்து வைத்தது. அவ்வகையில் சிட்டி யூனியன் வங்கியின் 758 வது கிளை காஞ்சிபுரம் அடுத்த ஆர்பாக்கம் கிராமத்தில் இன்று தனது சேவையை துவக்கியது. வங்கியின் மண்டல நிர்வாக அதிகாரி துவக்கி வைத்தார். மேலும் வங்கியின் செயல்பாட்டினை கிரஷர் உரிமையாளர் சங்கத்தின் தலைவரும் , மாமன்ற உறுப்பினருமான சங்கர் துவக்கி வைத்தார். வங்கியின் இருப்பு அறை மற்றும் பொதுமக்களுக்கான லாக்கர் அறையை ஆர்ப்பாக்கம் கே.எம்.எஸ்.கிரஷர் உரிமையாளர் கண்ணையன் குடும்பத்தினர் துவக்கி வைத்தனர். இதில் சிறப்பு விருந்தினராக உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் கலந்து கொண்டு வியாபாரிகள், சிறுகடைகள் மற்றும் விவசாயிகளுக்கு அதிக அளவில் கடன் உதவி அளித்து சிறப்பான சேவை செய்ய வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் விழாவிற்கு வந்த அனைவரையும் வங்கி கிளை மேலாளர் மணிகுரு வரவேற்றார்.

Tags:    

Similar News