தரைப்பாலம் உடைந்ததால் பொதுமக்கள் அவதி
வெங்காநல்லூரில் உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், போக்குவரத்து இடையூறு காரணமாக பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூர் பகுதியில் நேற்று பெய்த தொடர் மழையின் காரணமாக பெரியகுளம் கண்மாய் நிரம்பி ஊருக்குள் மழை நீர் புகுந்தது இதனால் தற்காலிக பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை முடக்கி உள்ளது.
தெற்கு வெங்காநல்லூர் பகுதியில் இருந்து நக்கனேரி ,.பட்டியூர்.,சிதம்பராபுரம்,. பகுதிக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர் மேலும் இப்பகுதியில் பள்ளி செல்லும் மாணவர்கள் இந்த பாலத்தை கடந்து தான் பள்ளிக்கு செல்ல வேண்டும் அதேபோல் பாலத்திற்கு அந்தப் பக்கத்தில் இருக்கக்கூடிய பொதுமக்கள் இராஜபாளையம் செல்ல வேண்டும் என்றால் இந்த பாதையை கடந்து தான் செல்ல வேண்டும். தரைப்பாலம் உடைந்தால் 7 கிலோ மீட்டர் சுற்றி தான் அப்பகுதிக்கு சென்று வரும் நிலை உள்ளது.
இதுவரை தெற்கு வெங்காநல்லூர் பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்து துறை நிர்வாகமும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகு மக்கள் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர் சம்மந்தபட்ட நிர்வாகம் உடனடியாக பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.