கிளாம்பாக்கம் நடை மேம்பாலம்- டெண்டர் வெளியீடு
கிளாம்பாக்கம் நடை மேம்பாலம்- டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
Update: 2024-01-31 09:58 GMT
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பில் ரூ.400 கோடி செலவில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது. நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள பேருந்து முனையத்தில் நாளொன்றுக்கு 2,300 பேருந்துகள் இயக்கப்படுகிறது. பேருந்து முனையத்தில் ஓட்டுநர், நடத்துனர்களுக்காக படுக்கைகளுடன் கூடிய ஓய்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரம், கிண்டி மற்றும் பல பகுதிகளை இணைக்கும் வகையில் பேருந்துகள் இயக்கப்படுகிறது.