இருதரப்பினர் இடையே மோதல்-2 பேர் கைது
திருவண்ணாமலை மாவட்டம்,வெறையூர் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
Update: 2024-05-15 12:29 GMT
திருவண்ணாமலை மாவட்டம், வெறையூர் அடுத்த அரடாபட்டு பகுதியை சேர்ந்தவர் சவரியம்மாள் (வயது 72), அதே பகுதியைச் சேர்ந்த அசோக் மனைவி கருத்தம்மாள் (28).இருவருக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக முன் விரோதம் இருந்து வந்த நிலையில் ஒருவருக்கொருவர் ஆபாசமாக பேசி தாக்கியுள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் மணிகண்டன், ஹரிகரன், செந்தில் உள்பட 4 பேர் மீதும் வெறையூர் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.மேலும் அன்பரசன் மற்றும் ஹரிஹரன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.