பள்ளி வாகனம் மோதி 10 வகுப்பு மாணவன் பலி
By : King 24X7 News (B)
Update: 2023-11-07 12:16 GMT
உயிரிழந்த மாணவர்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியை சேர்ந்த மாணவன் ரோஷன். இவர் குன்னூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் 10-வகுப்பு பயின்று வருகிறார். கோத்தகிரி வட்டம் நடுஹட்டி கிராமம் அட்டவாலா பாரதி நகர் என்ற முகவரியை சார்ந்த ரோஷன் இருசக்கர வாகனத்தில் வந்தப்போது தனியார் பள்ளி பேருந்தும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த ரோஷன் படுகாயமடைந்தார். அவரை 108 ஆம்புலேன்ஸ் மூலம் குன்னூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயோ பறிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து குன்னூர் வெலிங்டன் காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.