கலெக்டரிடம் 3ம் வகுப்பு படிக்கும் மாணவன் கோரிக்கை மனு

ராமநாதபுரம் நகராட்சியில் கழிவுநீர் சாலைகளில் தேங்குவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் 3ம் வகுப்பு மாணவன் கோரிக்கை மனு அளித்துள்ளான்.

Update: 2024-02-27 11:21 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம் காத்தான் ஆத்மநாத சாமி நகர் 2வது தெருவில் வசித்து வருபவர் காளிதாஸ் இவரின் மகன் தருண் ராம் , மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான் ராமநாதபுரம் நகராட்சி பகுதி முழுவதும் பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறி சாலைகளில் ஆங்காங்கே குளம் போல் காட்சியளிக்கிறது இதனால் பொதுமக்கள் மாணவர்கள் வியாபாரிகள் பாதசாரிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர் நோய் பரவி பொதுமக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதனை மாவட்ட ஆட்சியர் சாலைகளில் செல்லும்போது பார்வையிட்டும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என தருண் ராம் என்ற மாணவன் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கேள்வி எழுப்பி கோரிக்கை மனு கொடுத்தான் இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது 3 ம் வகுப்பு பள்ளி மாணவன் விடுமுறை எடுத்துக்கொண்டு பொதுமக்களின் பிரச்சினைக்காக ஆட்சியர் விஷ்ணு சந்திரனிடம் கோரிக்கை மனு கொடுத்தது அனைவரையும் பாராட்ட செய்தது.

மேலும் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் கேணிக்கரை அரண்மனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் கழிவு நீர் பெருக்கெடுத்து தேங்கி இருப்பது போன்ற புகைப்படங்களை கோரிக்கை மனுவில் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News