நெடுஞ்சாலையில் அகற்றப்பட்ட தேங்கிய நீர்

குமாரபாளையம் அருகே நெடுஞ்சாலையில் தேங்கிய நீர் அகற்றப்பட்டது.

Update: 2024-06-04 00:46 GMT

குமாரபாளையம் அருகே நெடுஞ்சாலையில் தேங்கிய நீர் அகற்றப்பட்டது.


நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை, கத்தேரி பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது. இதனால் சர்வீஸ் சாலையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டு வருகிறது. இதன் சாலை மிக குறுகியதாக இருப்பதால், அனைத்து வாகனங்களும் மெதுவாக சென்று வருகின்றன. இந்த பகுதியில் உள்ள டி மார்ட் எனும் வணிக வளாகம் அருகே, குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு, சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றது.

இதனால் வாகனங்கள் செல்ல தடுமாறும் நிலை ஏற்பட்டது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நீரை வடிய செய்து, போக்குவரத்து சீராக நடந்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி எடுத்த நடவடிக்கையின்படி, தேங்கிய நீர் அகற்றப்பட்டது. இந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்லும் போது குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்படுவதால், இணைப்பு சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்லாத வகையில் மண் கொட்டப்பட்டு அடைக்கப்பட்டது.

Tags:    

Similar News