அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நிறைவு விழா
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் நடந்த நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நிறைவு விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது
விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பானது ஒரு வார கால சிறப்பு முகாமை சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம் அக்கரைபாளையம் ஊராட்சியில் நடத்தியது. பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கணேசன் வழிகாட்டுதலின்படி இந்த முகாம் நடைபெற்றது.
இதன் நிறைவு விழாவிற்கு துறையின் டீன் டாக்டர் செந்தில்குமார் தலைமை தாங்கி, முகாமில் பங்கேற்று சிறப்பாக பணியாற்றிய துறை மாணவர்களை வாழ்த்தி பேசினார். மேலும் இதுபோன்ற பல்வேறு சேவைகளை பொதுமக்களுக்கு வழங்குமாறு மாணவர்களை ஊக்கப்படுத்தினார். இந்த முகாமில் துறை மாணவர்கள், அக்கரைபாளையம் பகுதியில் பல்வேறு சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் விழிப்புணர்வு சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, துறையின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் தனசேகர் மற்றும் டாக்டர் ஜெயபாலன், மெய்பிரபு ஆகியோர் செய்திருந்தனர்.