முதல்வர் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை பொதுக்கூட்டம்

லால்குடி சிவன்கோயில் திடலில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

Update: 2024-03-04 03:05 GMT

லால்குடி சிவன்கோயில் திடலில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

.திருச்சி மாவட்டம் லால்குடி.சிவன்கோயில் திடலில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழிகாட்டுதலின்படி தமிழக முதல்வர் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் திமுக சார்பில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் புருஷோத்தமன் வரவேற்புரையாற்றினார் நகர்மன்ற தலைவரும்,நகர செயலாளருமான துரைமாணிக்கம் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு மாநில வளர்ச்சி கொள்கை குழு துணை தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில்மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக கிளை நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags:    

Similar News