கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு சங்க ஊழியர்கள் வேலை நிறுத்தம்

பாபநாசம் ஒன்றியத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ஊழியர்கள் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-06-04 04:17 GMT

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் 

 தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு ஊழியர்கள் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்காடி விற்பனையாளர்களே நுகர்வு வாணிப கழகத்திற்கு நேரில் சென்று பொருள்களை எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது இதனை தவிர்க்க வேண்டும். ரேஷன் கடைகளுக்கு விநியோகிக்கப்படும் அத்தியாவசிய பொருள்களின் மூட்டை ஒன்றுக்கு ஒரு கிலோ முதல் 5 கிலோ வரை எடை குறைவாக காணப்படுகிறது.

இதனை தடுத்து நிறுத்த வழிவகை செய்ய வேண்டும் என்பது உள்பட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாபநாசம் ஒன்றியத்தில் அனைத்து தொடக்க கூட்டுறவு சங்க ஊழியர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப் போராட்டத்தில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் நகர கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் மற்றும் அனைத்து ரேஷன் கடை பணியாளர்கள் அனைவரும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News