கலப்பட சாராயம் தயாரித்தவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது!
மதுபானம் தயாரித்தவரை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு.
கோவை அருகே சட்ட விரோதமாக கலப்பட மதுபானம் தயாரித்தவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
கோவை மாவட்டம் காரமடை பகுதியில் சட்ட விரோதமாக கலப்பட மதுபானம் தயார் செய்து விற்பனைக்கு வைத்திருந்த அப்பகுதியை சேர்ந்த முகமது அலி மகன் அய்யனார் (எ) சையத் அலி(46). இவரை கடந்த டிசம்பர் மாதம் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.
பல்வேறு குற்றச்செயலில் ஈடுபட்ட சையத் அலி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதனடிப்படையில் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அதை தொடர்ந்து சட்ட விரோதமாக கலப்பட மதுபானம் தயார் செய்த வழக்கு குற்றவாளியான சையத் அலி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.