காணக்குளம் கண்மாய் உடைப்பு
காணக்குளம் கண்மாய் உடைப்பு ஏற்பட்டதால் 40 குடும்பங்கள் பாதிக்கும் அவல நிலை நீடிக்கிறது.
Update: 2023-12-18 09:23 GMT
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சம்சிகாபுரம் பஞ்சாயத்து உட்பட்ட வடக்கு களிங்கள் பகுதியில் காணக்குளம் கண்மாய் கரை உயர்த்தப்படாமல் இருந்ததால் தற்போது பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக கண்மாயில் நீர் வரத்து அதிகரித்துள்ளது காணக்குளம் கண்மாய் பகுதியில் 8 க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகிறது அந்த பகுதியில் 40க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த கண்மாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் 40 குடும்பங்கள் அவதிக்கு உள்ளாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது வருவாய்த்துறையினர் கண்மாய் கரைகளை உயர்த்தி தூர்வாரி பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காத அலட்சியத்தால் கண்மாய் உடைப்பு ஏற்பட்டு உள்ளது என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு கூறுகின்றனர்.