பச்சமலை பஞ்சாயத்து தலைவருக்கு கலெக்டர் பாராட்டு சான்று
குடியரசு தினவிழாவில் பச்சமலை பஞ்சாயத்து தலைவருக்கு கலெக்டர் பாராட்டு சான்று வழங்கினார்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியம், பச்சமலை ஊராட்சிமன்ற தலைவராக சின்னமணி உள்ளார். இவர் ஊராட்சியின் வளர்ச்சிக்காக, பல்வேறு திட்டப்பணிகளை சிறப்பாக முன்னெடுத்து செய்து வருகிறார்.
குறிப்பாக, 6 அங்கன்வாடிமையம் கட்டுவதற்கு, ஊராட்சி பொதுநிதிபங்கு தொகையாக 730 லட்சம் அளித்துள்ளார். மேலும், குழந்தை கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு, மாயம்பாடியில் உள்ள தனியார் பள்ளி முன்புறம் உள்ள குட்டையை சுற்றி, ஊராட்சி பொது நிதியில் இருந்து ₹9 லட்சம்மதிப்பிலான கம்பிவேலி அமைத்தார்.
ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பணியாற்றி வரும் சின்னமணி பிரேம் குமாருக்கு 'குழந்தைகள் நேயமிக்க' ஊராட்சியாக, சேலம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தமைக்காக குடியரசுதின விழாவில், கலெக்டர் கார்மேகம், பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
பாராட்டு சான்று பெற்ற ஊராட்சி தலைவர் சின்னமணிக்கு, துணை தலைவர் செல்லதுரை மற்றும் கவுன்சிலர்கள், பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.