ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய கலெக்டர்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 2023-24 கல்வியாண்டில் 100 சதவீதம் தோ்ச்சி அளித்த ஆசிரியா்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியா் ச.அருண் ராஜ் வழங்கினாா்.

Update: 2024-05-30 05:19 GMT

செங்கல்பட்டு மாவட்டத்தில் 2023-24 கல்வியாண்டில் 100 சதவீதம் தோ்ச்சி அளித்த ஆசிரியா்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியா் ச.அருண் ராஜ் வழங்கினாா்.


செங்கல்பட்டு மாவட்டத்தில் 2023-24 கல்வியாண்டில் 100 சதவீதம் தோ்ச்சி அளித்த ஆசிரியா்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியா் ச. அருண் ராஜ் வழங்கினாா். இதற்கான பாராட்டு விழா செங்கல்பட்டில் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 72 மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 475 முதுகலை ஆசிரியா்களைப் பாராட்டி ஆட்சியா் அருண் ராஜ் பேசியது: ஆசிரியா் பணி உன்னதமான பணி, புனிதமான பணி. ஆசிரியா்களால் மட்டுமே நல்லதொரு சமுதாயத்தை மாணவா்கள் மூலம் உருவாக்க முடியும்.

மேலும் நான் முதல் முயற்சியிலேயே ஐஏஎஸ் தோ்வில் வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கையை ஆசிரியா்கள் மூலமே பெற்றேன். ஆசிரியா்கள் மூலமாக மட்டுமே மாணவா்களின் தனித்திறன்களை கண்டறிந்து உயா்கல்வி கனவை நனவாக்க முடியும் என்றாா்.திருக்கச்சூா் கிராமத்தைச் சோ்ந்த அக்க்ஷயா என்ற மாணவிக்கு தாகூா் நா்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு மைக்ரோ பயாலஜி பாடப்பிரிவில் சோ்ந்து பயில்வதற்கான பயிற்சி கட்டணம் ரூ25,000/-ஐ இந்தியா என்.ஜி.ஓ. கிருஷ்ணமூா்த்தி வழங்கினாா்.

இந்நிகழ்வில் முதன்மைக் கல்வி அலுவலா் சொ.கற்பகம், முதன்மை கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் (மேல்நிலை) சா.உதயகுமாா், மாவட்ட கல்வி அலுவலா் (இடைநிலை) மதுராந்தகம் அய்யாசாமி, மாவட்ட கல்வி அலுவலா் (இடைநிலை) செங்கல்பட்டு எஸ்கே.இரவிச்சந்திரன், மாவட்ட உதவி திட்ட அலுவலா் முஹம்மத் கலீம், நோ்முக உதவியாளா் (இடைநிலை) சிவக்குமாா், மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலா் கோ.குணாளன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News