சிறு தொழில்களுக்கான கடன் பெற ஆட்சியர் அழைப்பு!
சிறு தொழில்களுக்கான கடன் பெற வங்கிகளில் விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.;
By : King 24x7 Angel
Update: 2024-07-04 11:01 GMT
திருவண்ணாமலை
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் வகுப்பைச் சேர்ந்தோர் சிறு தொழில்கள் வியாபாரம் செய்ய தனிநபர் மற்றும் சுய உதவிக் குழுக்களுடன் கடனுதவி பெற அதற்கான திட்ட அறிக்கை, சாதி, வருமானம், இருப்பிடம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்ற சான்றிதழ்களுடன் வங்கிகளில் விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.