பெரம்பலூரில் 349 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

பெரம்பலூர் நல்லூர் கிராமத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் 349 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Update: 2024-02-15 06:31 GMT

பெரம்பலூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் 349 பயனாளிகளுக்கு ரூ.1,60,61,470 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா கற்பகம், வழங்கினார். பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பெருமத்தூர் வடக்கு, நல்லூர் கிராமத்தில்,நடைபெற்ற மாவட்ட ஆட்சித்தலைவரின் மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் 349 பயனாளிகளுக்கு ரூ.1,60,61,470 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கற்பகம், வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்த போது இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமிற்காக பொதுமக்களிடமிருந்து 445 மனுக்கள் பெறப்பட்டு அதில் 294 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 151 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினம் 349 பயனாளிகளுக்கு ரூ.1,60,61,470 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இது போன்ற அரசு விழாக்கள் என்பது, மக்களுக்காக அரசு செயல்படுத்துகின்ற அனைத்து திட்டங்களையும் கொண்டு சேர்க்கும் முயற்சியாகும். பல்வேறு துறைகளின் சார்பில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் அனைவரும் இந்த திட்டங்களை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், வருவாய்துறையின் சமூக பாதுகாப்புத் திட்டம் , ஊரக வளர்ச்சித் துறையின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் , பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் தோட்டக்கலைத் துறை கூட்டுறவுத் துறை என பல்வேறு துறை சார்பில் மொத்தம் 349 பயனாளிகளுக்கு ரூ.1,60,61,470 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கற்பகம் வழங்கினார்.

இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, சார் ஆட்சியர் கோகுல் மகளிர் திட்ட இயக்குநர் அருணாச்சலம், ஊராட்சிகள் உதவி இயக்குநர் வீரமலை, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் சுரேஷ் கிறிஸ்டோபர், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கார்த்திக்கேயன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சரண்யா, குன்னம் வட்டாட்சியர் கோவிந்தம்மாள், பெருமத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் மற்றும் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News