அரசு விதை பண்ணையில் கலெக்டர் ஆய்வு

அரசு விதை பண்ணையில் கலெக்டர் ஆய்வு;

Update: 2024-07-15 06:55 GMT
அரசு விதை பண்ணையில் கலெக்டர் ஆய்வு

கலெக்டர் ஆய்வு

  • whatsapp icon
கள்ளக்குறிச்சி அடுத்த வடக்கனந்தலில் உள்ள 47 ஏக்கர் பரப்பளவிலான மாநில அரசு விதைப் பண்ணை உள்ளது. இங்கு கடந்த 3 ஆண்டுகளில் ஒரு கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பில் 281.055 மெட்ரிக் டன் விதைகள் மற்றும் 77,800 எண்ணிக்கையில் தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் விதைகள் மற்றும் தென்னங்கன்றுகள் மாவட்டத்தில் உள்ள 8 வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு அனுப்பப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இந்த விதை பண்ணையின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் பிரசாந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, கடந்த சொர்ணவாரி பருவ நெல் விதை பண்ணை, நொச்சி மற்றும் ஆடாதொடா நாற்றங்கால் வளர்ப்பு முறைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
Tags:    

Similar News