அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சீரமைக்கப்பட வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2024-03-03 09:00 GMT

ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சீரமைக்கப்பட வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார். 

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சீரமைக்கப்பட வேண்டிய பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் 30 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள கட்டிடங்கள் பராமரிப்பு பணி மற்றும் வர்ணம் பூசுதல், முதிர்வு காலம் முடிந்த மருத்துவ இயந்திரங்கள், பயன்பாடில்லாத பழைய பொருட்களை கழித்து ஒதுக்குதல், மருத்துவமனையின் முகப்பு பகுதியில் செடிகளை வைத்து அழகு படுத்திட மருத்துவ அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் மருத்துவமனை, கல்லூரி, சமையல் கூடம், சலவை கூடம் உள்ளிட்ட பயன்பாட்டில் உள்ள கட்டிடங்களை வர்ணம் பூசி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News