வேளாண்மை விரிவாக்கம் மையத்தை ஆட்சியர் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள இடு பொருட்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தியாகதுருகம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள இடு பொருட்கள் குறித்து கலெக்டர் ஷ்ரவன்குமார் நேற்று ஆய்வு செய்தார். மையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட உளுந்து விதைகளை உடன் பகுப்பாய்வு செய்து சான்று அட்டை பொருத்தி விவசாயிகளுக்கு விநியோகம் செய்திட வேண்டும்.
விவசாயிகள் மத்தியில் உயிர் உரம், நுண்ணுாட்ட உரங்கள்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். அதற்காக அனைத்து வேளாண்மை துறை கூட்டங்களிலும், விவசாயிகள் குறைதீரப்பு கூட்டத்திலும் கண்காட்சி அமைத்து விசாயிகளுக்கு எடுத்துரைத்து விநியோகம் செய்திட வேண்டும். அனைத்து திட்ட இடுபொருட்களையும் உரிய காலத்தில் திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி விவசாயிகளுக்கு விநியோகம் செய்திட வேண்டும் என கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
ஆய்வின்போது, வேளாண்மை துணை இயக்குநர் (திட்டம்) சுந்தரம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயராகவன், தியாகதுருகம் வேளாண்மை உதவி இயக்குநர் சந்துரு மற்றும் வேளாண்மைத் துறை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் உடனிருந்தனர்.