குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கவுள்ள கரும்புகளை ஆட்சியர் ஆய்வு
பொங்கல் பண்டிகைக்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கவுள்ள கரும்புகளை மாவட்ட ஆட்சியர் அருணா ஆய்வு செய்தார்.
Update: 2024-01-07 05:19 GMT
வரும் பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்போடு கரும்பு வழங்க படவுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு விநியோகம் செய்ய உள்ள முழு நீள கரும்புகள் இன்று லாரிகள் மூலம் உதகை வந்தடைந்தது. இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா பார்வையிட்டு கரும்பின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.