வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஆட்சியர் ஆய்வு
தூத்துக்குடி தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பதிவேற்றம் செய்யும் பணியை தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி பார்வையிட்டார்.
Update: 2024-04-11 01:54 GMT
தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட உள்ள மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களுக்கான சின்னங்கள் பதிவேற்றம் செய்யும் பணி மற்றும் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குப்பதிவுக்கு தயார் செய்யும் பணி ஆகியவை BEL நிறுவன பொறியாளர்களால் இன்று 9.4.24 தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இப்பணிகளை தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி பார்வையிட்டார்.