படித்தால் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறலாம்:கலெக்டர் அறிவுரை

ராணிப்பேட்டை நகராட்சி முஸ்லிம் தொடக்கப்பள்ளியில் ஆட்சியர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-07-04 17:55 GMT

மாவட்ட ஆட்சியர் ஆய்வு 

ராணிப்பேட்டை நகராட்சி முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் கலெக்டர் வளர்மதி ஆய்வு செய்தார்.அப்போது, அப்பள்ளியில் 5-ம் வகுப்பு வரை மொத்தம் 9 மாணவர்கள் மட்டுமே வருகை தந்துள்ளது குறித்து கேட்டறிந்து, மாணவ - மாணவிகளின் அறிவுத்திறனை ஆய்வு செய்தார்.

குழந்தைகள் கற்றல் திறமை மிகவும் மோசமாக உள்ளது. அவர்களுக்கு முறையாக பாடங்களை கற்பிக்க வேண்டும். பின்னர் நகராட்சியில் கட்டப்பட்டுள்ள அறிவுசார் மையத்தை பார்வையிட்டு அங்கு பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட 15 நபர்கள் போட்டித் தேர்வுகளுக்கு புத்தகங்களை வாசித்துக்கொண்டிருந்ததை பார்வையிட்டு ஒவ்வொருவராக அவர்கள் என்ன தேர்வுக்கு தயார் செய்து வருகின்றனர் என்பதை கேட்டறிந்தார்

அப்போது இளைஞர் ஒருவர், கலெக்டரிடம் நீங்கள் எவ்வாறு இந்த தேர்வுகளில் வெற்றி பெற்றீர்கள்?. உங்களுடைய அனுபவங்களை எங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதற்கு கலெக்டர் தான் எவ்வாறு போட்டித் தேர்வுக்கு தயார் ஆனார் என்பது குறித்து எடுத்துரைத்தார்.ஒவ்வொருவருக்கும் சில திறமைகள் உள்ளது. அதைக்கொண்டு உங்களுக்கு ஏற்றார் போல் அறிவை பயன்படுத்தி இடைவிடாமலும், மனம் தளராமலும் தொடர்ந்து படித்தால் கட்டாயம் வெற்றி நிச்சயம் என போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிவரும் நபர்களுக்கு கலெக்டர் வளர்மதி அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News