ஒகேனக்கல் குடிநீரை மக்கள் காய்ச்சி குடிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட மூலமாக வழங்கப்பட்ட வரும் குடிநீரை பொதுமக்கள் நன்றாக காய்ச்சி ஆற வைத்து குடிக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2024-06-16 03:37 GMT

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட மூலமாக வழங்கப்பட்ட வரும் குடிநீரை பொதுமக்கள் நன்றாக காய்ச்சி ஆற வைத்து குடிக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.


தர்மபுரி மாவட்டத்தில் கலந்து சில நாட்களாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலமாக வழங்கப்பட்ட வரும் குடிநீர் களங்களாக வருவது எடுத்து பொதுமக்கள் தொடர்ந்து புகார் எழுப்பி வந்தனர் இதனை அடுத்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது, கர்நாடக மாநிலம் மற்றும் பெங்களூரு சுற்றுவட்டார பகு திகளில் தொடர் மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக அந்த பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் மண் கலந்து கலங்க லாக ஒகேனக்கல் பகுதிக்கு வந்து கொண்டிருக்கிறது. எனவே ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக வழங்கப் படும் குடிநீர் மற்றும் அப்பகுதியை சுற்றியுள்ள நீர் ஆதாரங் களில் எடுக்கப்பட்டு வரும் குடிநீரை பொதுமக்கள் நன்றாக காய்ச்சிகொதிக்கவைத்து பின் ஆறவைத்து குடிக்கவேண்டும். இதன் மூலம் நோய்தொற்றில் இருந்து தங்களை முழுமையாக பாதுகாத்து கொள்ள முடியும். பொதுமக்கள் தினமும் தேவைக்காக பிடித்து வைக்கும் தண்ணீரை மூடி வைக்க வேண்டும். தண்ணீர் பிடிக்கும் பாத்திரங்களை நன்றாக கழுவி சுத்தப்படுத்த வேண்டும். சுற்றுப்புறங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

கேன்களில் குடிநீர் வழங்கும் தனியார் நிறுவனங்கள் குடிநீரின் தரத்தை உறுதி செய்த பின்னரே விற்பனைக்கு கொண்டு வர வேண் டும். இவ்வாறு விற்பனை செய்யப்படும் குடிநீரில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News