மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கிய ஆட்சியர்
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த முகாமில் மாற்று திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை ஆட்சியர் வழங்கினார்.;
Update: 2024-06-19 08:00 GMT
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கிய ஆட்சியர்
ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மாற்று திறனாளிகளுக்கான அடையாள அட்டைகள் வழங்கும் வாராந்திர முகாமில் மருத்துவ சான்றின் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் வளர்மதி கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். அப்போது துறை சார்ந்த அரசு அதிகாரிகள் பலர் உடனே இருந்தனர்.