வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த ஆட்சியர்

சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் 100% வாக்குப்பதிவு வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணியினை விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.;

Update: 2024-03-26 04:40 GMT

என் ஓட்டு விற்பனைக்கு அல்ல நமது வாக்கு நமது எதிர்காலம் என்பன உள்ளிட்ட தேர்தல் விழிப்புணர்வு கோஷங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு வெம்பக்கோட்டையில் உள்ள முக்கிய வீதிகளில் பொதுமக்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் என பலர் கலந்து கொண்ட பேரணியில் கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர்.இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஊர்வலத்தை கலெக்டர் ஜெயசீலன் கொடியை அசைத்து தொடங்கி வைத்தார்.

Advertisement

ஊர்வலத்தில் தேர்தல் துணை ஆட்சியர் திருப்பதி ,மாவட்டவருவாய் அலுவலர் சிவகுமார், வெம்பக்கோட்டை தாசில்தார் முத்துபாண்டீஸ்வரி, இன்ஸ்பெக்டர் சங்கர், வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், தாலுகா அலுவலக பணியாளர்கள், பட்டாசு ஆலை உரிமையாளர்கள் ஜெயபிரகாஷ், மகேஷ்குமார், மற்றும் ஊர் பொதுமக்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஊர்வலம் வெம்பக்கோட்டை பஸ் நிறுத்தத்திலிருந்து முக்கிய வீதிகளின் வழியாக வெம்பக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் முடிந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கு வெம்பகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகத்தாய் நன்றி கூறினார்

Tags:    

Similar News